Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 12, 2017

    பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை வழங்காமல் ஏமாற்றக் கூடாது

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும்  என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை.

    OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified.

    பங்களிப்பு ஓய்வூதிய முதலீட்டில் குளறுபடி, தகவல் உரிமையில் தகவல்


    பள்ளிக்கல்வி திட்டம்: நாளை ஆலோசனை

    பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம், நுழைவுத் தேர்வு பயிற்சி, 'ஸ்மார்ட்' வகுப்பு என, பல்வேறு திட்டங்கள், பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட உள்ளன.

    நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளது.

    ’குரூப் - 1’ முதன்மை தேர்வு; அக்., 13ல் துவக்கம்

    துணை கலெக்டர் உட்பட, 85 காலி இடங்களுக்கான, ’குரூப் - 1’ முதன்மை தேர்வு, அக்., 13ல் துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34; வணிக வரி கமிஷனர், எட்டு; மாவட்ட பதிவாளர், ஒன்று; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஐந்து மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, எட்டு என, மொத்தம், 85 இடங்களுக்கு, குரூப் - 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு, பிப்., 19ல் நடந்தது.

    அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

    அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது.

    அ.தே.இ - NMMS தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு டிசம்பர் - 2017 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

    Wednesday, October 11, 2017

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமுல்படுத்த தமிழக அரசு உத்தரவு, 1.1.16 கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடன் அமுல்படுத்த உத்தரவு

    பள்ளிக்கல்வி - 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 2017 கால அட்டவணை வெளியீடு

    அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு!

    7-வது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை தமிழக தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

    முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் துவங்கியது. மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. 

    ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்

    ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

    1) 01.01.16 முதல் ஊதிய உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும்

    2) நவம்பர் 2017 முதல் புதிய சம்பளம் வழங்கப்படும்.

    Tuesday, October 10, 2017

    ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம், அமைச்சரவை ஆலோசனை!

    வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது - 7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

    Monday, October 9, 2017

    பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

    பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை!!!


    7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

    Thursday, September 28, 2017

    ஏழாவது ஊதியக்குழு - ஒரு பார்வை

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.   

    Wednesday, September 27, 2017

    7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

    7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

    Thursday, September 21, 2017

    ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663 முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம்.

    ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    அறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் 20% இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.


    அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள் என்று அரசு ஊழியர், அசிரியர்களுக்கு நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

    NIOS என்றால் என்ன?

    **பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்

    **தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

    வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

    வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    மத்திய அரசு ஊழியர்களுக்கான 1% அகவிலைப் படி உயர்விற்கான ஆணை

    ஆசிரியப் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துகொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

    ☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.*

    ☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.

    தேசிய சைபர் ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?

    ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன.

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ்!

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த விழாக்கால போனஸை வழங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

    ஆசிரியர் தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் விளக்கம்.

    செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகவில்லை என்பதே உண்மை) வெற்றி பெற்று வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பிழந்துள்ள ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுமா? வெயிட்டேஜ் முறை ஒழிக்கப்படுமா?

    அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு

    தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

    ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

    ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்

    பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார். 

    புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

    தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    Tuesday, September 19, 2017

    ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு!

    இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் பியுஷ் கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்து உள்ளது . அது பாதுகாப்பு பிரிவின் கீழ் வரும் துறைகளுக்கு ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த இந்தியன் ரெயில்வே முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    No Pay Commission In Future - Finance Minister Arun Jaitley

    The central government is mulling not to form any Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future. The report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.  No new commission may be formed in future for increasing salaries of central government employees, a senior Finance Ministry official told The Sen Times on condition of anonymity.

    புதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு

    'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த, ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கல்வியாளர்கள் அடங்கிய பாடத்திட்ட குழுவும், பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள, பள்ளி கல்வி துறை செயலர், உதயசந்திரன் உள்ளிட்ட எவரையும் நீக்கக் கூடாது' என, கூறப்பட்டிருந்தது.

    தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்

    அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற  நீதிபதி கிருபாகரன்,” புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா? செலுத்தவில்லை என்றால் ஏன் செலுத்துவதில்லை? எப்போது செலுத்தப்படும்?

    தொடக்கக் கல்வி - 'NUEPA' திட்டத்தின் கீழ் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட இரண்டு நாள் பயிற்சி !

    பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்

    தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில்,'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்

    'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை; தமிழக அரசு பதில்

    'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை என்றும் வரும் நவம்பரில் தமிழகப் பள்ளிகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய  பாட திட்டம் தயாரிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்ட குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

    முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்

    அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான கவுன்சலிங் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது.

    ஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளி

    தமிழக மருத்துவ கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50% இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மனைவி் பிரசவத்தின் போது "ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை" - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

    வங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்விக்குமா எஸ்.பி.ஐ?

    எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்’ என்ற நடைமுறையைத் தளர்த்துவதுகுறித்து தற்போது ஆலோசித்துவருகிறது. 'ஏப்ரல் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படும்' என்று அந்த வங்கி அறிவித்தது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ கூறியிருந்தது.